பல்கலைக்கழக விவசாயபீடங்களின் பேராசிரியர்கள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள உர நெருக்கடி தொடர்பில் தெளிவான விளக்கத்தை முன்வைக்கும் முகமாக கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கக்கோரியே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், 141 கலாநிதிகளும் பேராசிரியர்களும் கையொப்பமிட்டுள்ள நிலையில், விவசாய அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கடிதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் கலந்துரையாடலுக்கான நேரம் ஒதுக்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment