கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு வாய்ப்பினை வழங்குவதற்கான கட்டணத்தை கொழும்பு துறைமுக நகரம் அறிவித்துள்ளது.
இதில் தனியார் மற்றும் வணிகம் என இரு பிரிவுகளின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பிரிவில் இரண்டு முதல் ஐந்து நபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.30,000, ஆறு முதல் 10 நபர்களுக்கு ரூ.50,000, 10 பேருக்கு மேல் ரூ.50,000 என போர்ட் சிட்டி நிறுவனம் கட்டணங்களை அறிவித்துள்ளது.
மேலும் வணிகப்பிரிவில் 10 பேருக்கும் குறைவான நபர்களுக்கு ரூ.100,000 மற்றும் 10 பேருக்கு மேல் இருந்தால், கட்டணம் மாறுபடும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இரு பிரிவினருக்கும் ஒரே நேரத்தில் மூன்று மணி நேரம் வழங்கப்படும் என்றும் போர்ட் சிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews