வேகமாக பரவும் புதிய திரிபு! – ஆய்வுகள் ஆரம்பம்
புதிய கொரோனா திரிபு குறித்து மிக அவதானமாக கண்காணித்து வருகின்றோம் என இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னாபிரிக்கா உட்பட பல நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா திரிபு வைரஸானது,
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸின் பெரும் திரிபாக இருக்கலாம். அத்துடன் இத் திரிபானது தற்போது பாவனையில் இருக்கும் கொரோனாத் தடுப்பூசிகளை எதிர்க்கும் திறனைக் கொண்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு என உலக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இலங்கையில் இந்த திரிபு கண்டறியப்படவில்லை என்றாலும் இந்த திரிபுகள் உலகளவில் வேகமாக பரவி வருகின்றன. இது தொடர்பில் சுகாதார அமைப்பு எச்சரிக்கையுடன் உள்ளது.
குறித்த சி .1.2 வைரஸ் திரிபானது தென்னாபிரிக்கா, சீனா, இங்கிலாந்து, நியூசிலாந்து, போர்த்துக்கல், சுவிட்சர்லாந்து, கொங்கோ மற்றும் மொரிஷியஸ் குடியரசு போன்ற பிற நாடுகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது உலகளவில் மிக வேகமாக பரவிவரும் டெல்டா வகை திரிபைவிட இந்த சி .1.2 மிகவும் ஆபத்தானதானதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் விஞ்ஞானிகள், இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.