வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் விவசாயிகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வலியுறுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் நடைபெறுகிறது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கமநல சேவை நிலையங்களின் முன்பாக பெருமளவான விவசாயிகளின் பங்குபற்றலுடன் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினகள் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உட்பட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
#SriLankaNews