பிரபல பஞ்சாபி நடிகரும் சமூக ஆர்வலருமான தீப் சித்து அரியானா மாநிலம் சோனிபட் அருகே நேற்றிரவு இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
தீப் சித்து பயணித்த காரானாது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றின் பின் பகுதியில் மோதியமையினாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படுகாயங்களுக்குள்ளான தீப் சித்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மரணம் பொலிவூட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
#IndiaNews
Leave a comment