ஆந்திரவில் கடும் வெள்ளப்பெருக்கு – இதுவரை 44பேர் சாவு

andhra

andhra

ஆந்திராவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் இதுவரை 44 பேர் சாவடைந்துள்ளனர்.

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 44ஆக உயர்வடைந்துள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில், சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளமையினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு நோய்கள் தொற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பியதால் அதன்  அணைகள் உடைந்துள்ளதாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆந்திர அரசு நிவாரணங்கள் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#india

Exit mobile version