முன்னாள் ஆளுநர் அசாத்சாலியின் மறியல் நீடிப்பு !

1629371978 1618491646 court 2

சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டதன் காரணமாக கைது செய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது.

இதன்போது ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது .

கடந்த மார்ச் 9 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் நாட்டின் சட்டம் மற்றும் முஸ்லீம் சட்டம் என்பன குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் கடந்த மார்ச் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைதுசெய்யப்பட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகிய அசாத் சாலியால் இம் மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கை மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version