உள்ளாட்சி சபைகளின் பதவிக்காலம் நீடிப்பு!!

gover

உள்ளாட்சி சபைகளின் பதவி காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என தெரியவருகின்றது.

340 உள்ளாட்சி மன்றங்களில், 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 275 பிரதேச சபைகள் ஆகியவற்றின் பதவி காலமே, தேர்தலின்றி இவ்வாறு நீடிக்கப்படவுள்ளது. அதன்பின்னர் எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக்காலமும் நீடிக்கப்படும். இறுதியாக அச்சபைக்கே தேர்தல் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிதி நெருக்கடி, தொற்று நிலைமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டே அரசு இந்த முடிவை எடுக்கும் என தெரியவருகின்றது.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உள்ளாட்சி சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version