முடிந்தால் வெளியேற்றுங்கள்! – தயாசிறி சவால்

Dayasiri Jayasekara

“முடிந்தால் அரசிலிருந்து எங்களை வெளியேற்றிக் காட்டுங்கள். அவ்வாறு நடந்தால் அது அரசுக்கே ஆப்பாக மாறும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மொட்டு கட்சியிலுள்ள சிலரே எம்மை கடுமையாக விமர்சிக்கின்றனர். முடிந்தால் எங்களை வெளியேற்றிக்காட்டுங்கள் என அவர்களுக்கு நாம் சவால் விடுக்கின்றோம்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்தவர்களுக்கு இன்றும் அக்கட்சிமீது பற்று உள்ளது. எனவே, தொடர் விமர்சனங்களை சகித்துக்கொள்ளமாட்டார்கள். நாம் 14 பேர் மட்டும் வெளியேறமாட்மோம். மஹிந்த அமரவீர கூறியதுபோல நடக்கலாம்.” – என்றார்.

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, அரசிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் 50, 60 பேருடனேயே வெளியேறுவோம்.” – என்று அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

Exit mobile version