மருதங்கேணி தெற்கு தாளையடிப் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து அதிகளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்தக் காணியை காணி உரிமையாளர் சுத்தம் செய்தவேளை, அதிகளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக உடனடியாகவே குறித்த காணி உரிமையாளரால் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெற்று குறித்த பகுதியில் அகழ்வுப் பணியில் ஈடுபட்ட நிலையில், பெருமளவான அபாயகரமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை சிறப்பு அதிரடிப்படையினர் பொலிஸார் ஊடாக மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
#SrilankaNews
Leave a comment