ஞானசார தேரரின் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு யாழில் வைத்து உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் குறித்த கருத்தை தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் கிறீன்கிராஸ் விடுதியில் இடம்பெற்ற ஞானசாரருடைய சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவர் ஊடக சந்திப்பு என எம்மை அழைத்து சென்று அந்த நிகழ்ச்சியில் பங்குபற்ற வைத்ததாகவும் அதன் போது தாம் அச்சுறுத்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
# SrilankaNews