20
இந்தியாசெய்திகள்

அடுத்த மாதம் திருமணம்; கரூர் நெரிசலில் உயிரிழந்த புதுப்பெண், மாப்பிள்ளை

Share

தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், அடுத்த திருமணம் செய்துகொள்ளவிருந்த புதுப்பெண்ணும், மாப்பிள்ளையும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூரைச் சேர்ந்த கோகுலஸ்ரீ என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த மதுரையைச் சேர்ந்த ஆகாஷ் என்பவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது.

இந்த ஜோடி கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் பங்கேற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து கோகுலஸ்ரீயின் தாயார் ஊடகத்திடம் பேசும்போது, “சாவதற்காகத்தான் இப்படிப் போனார்களா? கட்சி கட்சின்னு ஏன் எல்லாரையும் உயிரை விட வெக்கறீங்க? கட்சி கட்சின்னு எத்தனை பேரோட குடும்பம் வீதியில நிக்குது?

அடுத்த மாதம் கல்யாணம். ரெண்டு பேருக்குமே 24 வயசுதான் ஆகுது. ரெண்டு பேரும் ரெண்டு மணிவரைக்கும் பேசிட்டுதான் போனாங்க. கரூர்ங்கறனால போனாங்க. மாடிலதான் நிக்கறேன்னு சொன்னாங்க. நானும் கூடத்தான் இருந்தேன்.

இறங்கி வரையிலதான் என் புள்ளைய கொன்னுட்டாங்க. ஆறரை மணிக்கு போன்ல பேசுனோம். கும்பலா இருக்கு வந்துருங்கனு சொன்னோம். செல்பி எடுத்துட்டு வந்துடறேன்னு சொன்னாங்க.

செய்திய பாத்துட்டுதான் நாங்க வந்தோம். என் பையன் தப்பிச்சுக்கிட்டான். புள்ளையும், மாப்பிள்ளையும் போயிட்டாங்க. என் புள்ளைய ஆசை ஆசையா வளர்த்தேன்” என்றார்.

Share
தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...