தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி மடிந்த வீரர்களை நினைவுகூரும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வானது, இன்று வியாழக்கிழமை (நவ 27) மாலை முல்லைத்தீவு இரணைப்பாலை (Iranapalai) துயிலுமில்லத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது.
கடும் மழையைப் பொருட்படுத்தாமல், முல்லைத்தீவு இரணைப்பாலைத் துயிலுமில்லத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில், மாவீரர் டிசாந்தியின் தந்தை கணேஸ் அவர்களால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
மாவீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில், பொதுமக்கள் உணர்வுபூர்வமாக இந்த அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.