பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் அவசர கூட்டத்துக்கு பங்காளிக் கட்சிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் நெருக்கடி சூழல் குறித்து ஆலோசனை நடாத்தவே இக்கூட்டம் இன்றைய தினம் 10 மணியளவில் அலரி மாளிகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நடைபெறவிருந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அதனை அடுத்து அமைச்சரவை முடிவுகளை அரசாங்க தகவல் திணைக்களம் ஊடகக் குறிப்பாக வெளியிடும் என அறிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment