நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தேவையானளவு எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதால் தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று முன்தினம் பல பகுதிகளில் மின்வெட்டு அமுலில் இருந்தது. நேற்றைய தினமும் சில இடங்களில் 10 நிமிடங்கள்வரை மின்வெட்டு அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews