இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் அவர் குறித்த பதவியில் இருந்து விலகவுள்ளார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் இவர் கைச்சாத்திட்டிருந்தார். அதனையடுத்து இவருக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்ததுடன் பதவி நீக்கம் செய்யுமாறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பதவி விலகும் முடிவை தற்போது எடுத்துள்ளார்.
#SriLankaNews