கொட்டாவ பகுதியில் ஏற்பட்ட மின்விபத்து!!

4154mducar084942

கொட்டாவ – அதுருகிரிய வீதியில் நேற்றிரவு (23) இடம்பெற்ற விபத்தினால் அப்பகுதிக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டதுடன் தொலைபேசி அமைப்பும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று சீமெந்து ஏற்றிச் சென்ற பௌசர் ரக வாகனம் ஒன்று கொட்டாவ – அதுருகிரிய வீதியில் சந்தைக்கு அருகில் இருந்து விலகி இரண்டு பாதுகாப்புச் சுவர்கள் மற்றும் உயர் அழுத்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

உயர் மின்னழுத்தக் கம்பத்தில் பௌசர் வாகனம் மோதியதில் மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் பௌசர் வாகனத்தின் முன்பகுதியில் விழுந்து அப்பகுதி மின்சாரம் தாக்கி முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பௌசர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version