24 6597e7e7e1f01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நானுஓயாவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தொழிலாளி பரிதாப பலி!

Share

நானுஓயா கிரிமிட்டி தோட்டத்தில் இன்று (12) பிற்பகல் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கிரிமிட்டி தோட்டத்தைச் சேர்ந்த 78 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தொழிலாளர்கள் குழுவாக இணைந்து தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அருகில் இருந்த மரம் ஒன்றிலிருந்த குளவிக் கூட்டை கழுகு ஒன்று கொத்தி கலைத்துள்ளது. இதனால் ஆவேசமடைந்த குளவிகள் அங்கிருந்த தொழிலாளர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளன.

குளவிகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான குறித்த வயோதிபப் பெண், சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...