பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம்மீது மேற்கொள்ளப்பட்ட முட்டை வீச்சு தாக்குதலுக்கு ஜே.வி.பி. கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே ஜே.வி.பியின் எம்.பியான விஜித்த ஹேரத் இந்த கண்டனத்தை வெளியிட்டார்.
இவ்வாறான ஜனநாயக விரோத மற்றும் ஒடுக்குமுறை செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
#SriLankaNews

