தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கட்டியெழுப்ப உலக நாடுகளிடம் உதவி கோரியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியிருந்தனர்.
இந்த நிலையில் சரியான பொருளாதார திட்டமிடல் இல்லாத காரணத்தினால் ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
இந்நிலையில் அமெரிக்கா ,இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தலிபான்களுக்கு உதவ முன்வந்துள்ளன. அந்த வகையில் இந்தியா அடுத்த மாதமளவில் ஒரு தொகுதி கோதுமையை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில் தமக்கு உதவுமாறு நோர்வே நாட்டுடன் தலிபான் பயங்கரவாதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதற்கமைய ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரின் தலைமையிலான குழு ஒன்று நோர்வேயை நோக்கி பயணம் ஆகியுள்ளது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் உதவி கேட்டு எதிர்வரும் நாட்களில் ஒரு தூதுக் குழு ஒன்றை அனுப்ப உள்ளதாக தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
#World