தமிழக அரசியலில் ஒலிக்கும் விசில்: விஜய்யின் தவெக-விற்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு!

hindutamil prod 2026 01 09 8f4degv6 bcca138c c36e 4511 bd3e 9382e0d9a2b1

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு (TVK) தேர்தல் ஆணையம் ‘விசில்’ (Whistle) சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் ‘விசில்’ சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக தவெக தரப்பில் ஆட்டோ, விசில், மற்றும் கிரிக்கெட் மட்டை ஆகிய மூன்று சின்னங்கள் பிரதானமாக கோரப்பட்டிருந்தன. இதில் ‘விசில்’ சின்னம் தற்போது காலியாக இருந்ததால், அதனை அக்கட்சிக்கு வழங்க ஆணையம் முடிவெடுத்தது.

விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் தெலுங்கில் ‘விசில்’ என்ற பெயரில் வெளியானதும், ‘தி கோட்’ படத்தில் ‘விசில் போடு’ பாடல் ஹிட் ஆனதும் இச்சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல எளிதாக இருக்கும் எனத் தொண்டர்கள் கருதுகின்றனர்.

ஜனநாயகன் பட விவகாரம் மற்றும் சிபிஐ விசாரணைகள் போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், பொதுச் சின்னம் கிடைத்துள்ளமை தவெக தொண்டர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

“விசில் சின்னம் மக்களிடையே ஏற்கனவே நன்கு அறியப்பட்டது. இது வாக்காளர்களிடம் எங்களை எளிதில் அடையாளம் காட்ட உதவும்” என கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இதேவேளை, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு (MNM) மீண்டும் ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version