மாகாண சபையினை கைப்பற்றியதும் கிழக்கு மாகாணத்தை ஒரு சிறந்த சுற்றுலா தளமாக மாற்றுவோம். மக்கள் அமைப்பின் முகாமையாளரான மதிமேனன் தெரிவித்தார்.
மட்/பட்/ ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயத்திற்கு மனையியல் பாடத்திற்காக மணவர்கள் பயிற்சிக்கான குளிர்சாதனப்பெட்டி, தையல் இயந்திரம் என்பன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் வழங்கி வைக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஓந்தாச்சிமடம் அழகிய கடற்கரை உள்ள பிரதேசம். இதனை அழகுபடுத்துவதற்கான இரண்டு, மூன்று திட்ட முன்மொழிவுகளை எங்களது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையினை கைப்பற்றியதும், இந்த விடயங்களை நாம் செய்து காட்டுவோம். குறித்த பகுதியினை சிறந்த சுற்றுத்தலமாக மாற்றுவோம்.

மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் போது அதற்கான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மக்களது மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இவை வழங்கி வைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews