ஈஸ்டர் தாக்குதல்! – சர்வதேசத்தை நாடுகிறார் பேராயர்

kar

பொரளையிலுள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட  சம்பவம் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கமும் பொலிஸாரும் நாடகமாடுவதைப் போன்று தோன்றுவதாக கொழும்பு மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சூம் தொழில்நுட்பம் மூலமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கர்தினால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில்  அவர் கருத்து தெரிவிக்கையில்,

பொரளையிலுள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட  சம்பவம் தொடர்பில்
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முனி உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வருகின்றோம். இதுதொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கிடைக்க ஐக்கிய நாடுகள் சபை மட்டுமன்றி தனக்கு தொடர்புள்ள சக்தி வாய்ந்த நாடுகளிடமும் உதவியை நாடவுள்ளதாக கொழும்பு பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொரளை தேவாலய குண்டுவெடிப்பில் அரசாங்கமும் பொலிஸாரும் நாடகமாடிவருவது தெளிவாகத் தெரிகிறது.இச் சம்பவத்தை பொலிஸார் கைகழுவி விட முயற்சித்தனர். அப்படி நடக்க அனுமதிக்க முடியாது.

இதுதொடர்பான விசாரணை முடிவதற்குள் நாரஹேன்பிட்டி வைத்தியசாலையில் அதே வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயமாகும்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வழங்குவதற்காக தனது கூட்டாளிகள் மூவர் எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இணைவார்கள். இம்மாத இறுதியில் இருந்து அதனை நேரடியாக கையாள்வதற்கான வாய்ப்பு அந்த அமைப்புக்கு இருக்கும்.  இது நீதிக்கான தேடலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version