தமிழகத்தில் நிலநடுக்கம்

tamilni 124

தமிழகத்தில் நிலநடுக்கம்

தமிழகத்தில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மற்றும் ஆம்பூர் அருகே 3.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 7.39 மணியளவில் பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்திலும், இன்று காலை 6.52 மணிக்கு 3.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கம், 75.87 நீளத்தில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version