மாலைதீவில் உயிரிழந்த இலங்கை காற்பந்தாட்ட தேசிய அணி வீரர் டக்சன் பியூஸ்லஸின் உடலம் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த பூதவுடல் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இன்று மாலையளவில் அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அஞ்சலிக்காக டக்சனின் பூதவுடல் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்படவுள்ளதுடன் எதிர்வரும் 5 ஆம் திகதி இறுதி அஞ்சலிகளுக்காக மன்னாரிற்கு கொண்டுசெல்லப்படும்.
அன்றைய தினம் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரும் வழியில் பூநகரி, முழங்காவில், தேவன் பிட்டி போன்ற இடங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட கழக வீரர்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பவனியாக எடுத்து வரப்படும்.
இதனையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை மாலை மன்னார் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews

