1646290279 DAKSHAN 2
செய்திகள்இலங்கை

நாட்டிற்கு வந்தது டக்சனின் உடலம்!!

Share

மாலைதீவில் உயிரிழந்த இலங்கை காற்பந்தாட்ட தேசிய அணி வீரர் டக்சன் பியூஸ்லஸின் உடலம் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த பூதவுடல் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக  நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இன்று மாலையளவில் அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அஞ்சலிக்காக டக்சனின் பூதவுடல் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்படவுள்ளதுடன்  எதிர்வரும் 5 ஆம் திகதி  இறுதி அஞ்சலிகளுக்காக   மன்னாரிற்கு கொண்டுசெல்லப்படும்.

அன்றைய தினம் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரும் வழியில் பூநகரி, முழங்காவில், தேவன் பிட்டி போன்ற இடங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட கழக வீரர்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பவனியாக எடுத்து வரப்படும்.

இதனையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை மாலை மன்னார் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...