இலங்கையில் வரட்சியான வானிலை நீடிக்கும்: அதிகாலை வேளைகளில் கடும் பனிமூட்டம் நிலவும் என எச்சரிக்கை!

23 64daf2fac3aa8

நாட்டின் பல பகுதிகளில் வரட்சியான வானிலை தொடரும் அதேவேளை, அதிகாலை வேளைகளில் பல மாகாணங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற, வரட்சியான வானிலையே நிலவும். அதிகாலை மற்றும் காலை வேளைகளில் கொழும்பு உட்பட பல மாவட்டங்களில் தற்காலிகமாகப் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்பின்படி,மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் & காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது

அதிகாலை வேளைகளில் நிலவும் பனிமூட்டம் காரணமாகத் தரைவழிப் போக்குவரத்துகளில் வீதிப் புலப்பாட்டுத் தன்மை (Visibility) குறைய வாய்ப்புள்ளது. எனவே, வாகனச் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக மலைப்பாங்கான வீதிகளில் பயணிப்போர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Exit mobile version