Untitled 62 1
செய்திகள்இலங்கை

குடிபோதையில் கடமையாற்றிய CTB நடத்துநர்: பயணிகளின் முறைப்பாட்டால் அதிரடி இடைநிறுத்தம்!

Share

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் குடிபோதையில் கடமையாற்றிய நடத்துநர் ஒருவர், பயணிகளின் முறைப்பாட்டைத் தொடர்ந்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை – ராசகல வீதியில் பயணித்த அரச பேருந்தின் நடத்துநர் போதையில் இருப்பதாகப் பயணிகள் சந்தேகித்துள்ளனர்.

இது குறித்து உடனடியாக பலாங்கொடை பிரதான போக்குவரத்து சபை அலுவலகத்திற்குத் தகவல் வழங்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில், பலாங்கொடை போக்குவரத்துச் சபை மேலாளர் தர்மஸ்ரீ ஹரிச்சந்திரவின் உத்தரவின் பேரில் விசேட குழுவொன்று குறித்த பேருந்தை இடைமறித்துப் பரிசோதனை செய்தது.

இதன்போது, நடத்துநர் மதுபோதையிலிருந்தமை உறுதி செய்யப்பட்டது. அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்ட குறித்த நடத்துநர், பலாங்கொடை பிரதான மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அங்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் மது அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த போக்குவரத்து சபை முகாமையாளர் தர்மஸ்ரீ ஹரிச்சந்திர, “பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு குறித்த நடத்துநர் உடனடியாகச் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவார் எனவும், அவர் மீது மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” எனவும் தெரிவித்தார்.

மேலும், பலாங்கொடை போக்குவரத்துச் சபை அல்லது பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கும் பொதுமக்கள், பேருந்துகளில் தமக்கு ஏற்படும் அசௌகரியங்கள் அல்லது ஊழியர்களின் முறையற்ற நடத்தைகள் குறித்து 0452287281 அல்லது 0776188875 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...