ஆன்லைனில் விற்பனையாகும் போதைப்பொருள்!

amazon

அமேசன் நிறுவனத்தினால் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டமையினால் அந்நிர்வாக இயக்குனர்கள் மீது மத்தியப் பிரதேசம் பிந்த் பொலிஸார் வழக்கொன்றை தொடுத்துள்ளனர்.

குறித்த வழக்கு நவம்பர் 13-ம் தேதி  பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிந்து பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அவ்வறிக்கையில், மேசான் நிர்வாக இயக்குநர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 38- போதைப் பொருள் மருந்துகள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை பிந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் சிங் விசாரணை செய்துவருகிறார். அமேசான் தளத்தின் மூலம் மாரிஜூவானா என்ற போதைப் பொருளை 20 லோடு புக் செய்யப்பட்டுள்ளது.

மாரிஜூவானா புக் செய்யப்பட்டதும், அதனை யாருக்கு டெலிவரி செய்யப்பட்டது என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

Exit mobile version