குழந்தையை விற்ற பணத்தில் போதைப் பொருள் வியாபாரம்!!

newborn

7 இலட்சம் ரூபாவுக்கு மூன்று மாதங்களேயான பச்சிளம் கைக் குழந்தையை  விற்பனை செய்து , அதை  பயன்படுத்தி போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதியினா் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

குறித்த சம்பவம் தொடர்பில்  சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குருநாகலிலேயே இவ்வாறு குழந்தை விற்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஒருவரிடம் கடிதமொன்றை பெற்றுக்கொண்டு, அநுராதபுரத்தில் உள்ள தம்பதியினருக்கே குழந்தையை விற்பனை செய்துள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட 28 வயதான பெண்ணின் பையில் சிறிய குழந்தையொன்றின் ஆடை இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து விசாரணையின்போதே   குழந்தை விற்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version