download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

Share

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு, நான்கு கார்களைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிச் சேதப்படுத்திய 29 வயதுடைய இளைஞரை எதிர்வரும் ஜனவரி 22-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்ய இன்று உத்தரவிட்டார்.

சந்தேக நபர் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டே வீதியில் சென்ற வாகனங்களைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த நபர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர். மருத்துவ பரிசோதனையில் அவரது உடலில் ‘ஐஸ்’ (ICE) மற்றும் ‘ஹெரோயின்’ போதைப்பொருட்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே போதைப்பொருள் பாவனைக்காகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக முன்னேற்ற அறிக்கையை அடுத்த வழக்குத் தவணையின் போது சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்தார்.

 

 

Share
தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....