மீண்டும் பணிப்பாளராக பொறுப்பேற்றார் மருத்துவர் சத்தியமூர்த்தி

WhatsApp Image 2021 09 03 at 1.50.54 PM

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனாத் தொற்ரைக் கருத்தில்கொண்டு மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் பிரிட்டனுக்கு மேற்படிப்புக்காக சென்றிருந்த அவர், தற்காலிகமாக
தனது பொறுப்பை பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்திருந்தார்.

தற்போது விடுமுறையில் நாடு திரும்பிய இவரை, பணிப்பாளர் பொறுப்பை ஏற்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தனது பதவியை ஏற்கவுள்ளார்.

இதற்கமைய தனது மேற்படிப்பை பிற்போட்டுள்ள அவர் இன்றைய தினம் தனது கடமைகளை மீளவும் பொறுப்பேற்றுள்ளார்.

 

Exit mobile version