யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் கே.நந்தகுமாரன் !

cd24e71d 1128 4933 bd97 f2a0871780a5

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் நேற்றையதினம் இந்நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று அவர் தனது பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த வைத்தியர்.த.சத்தியமூர்த்தி மேற்படிப்புக்காக மீண்டும் வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால் தற்காலிகமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை வைத்தியர் கே.நந்தகுமாரன் வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராகவும் தொடர்ந்து செயற்படவுள்ளார்.

 

#Srilankannews

Exit mobile version