ஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு

Double bombing in Afghanistan

ஆப்கானின் தலைநகர் காபூலில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை குண்டு வெடிப்பில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

காபூல் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றை குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் இத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

வைத்தியசாலை முன் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்ததில் 9 பேர் காயமடைந்தனர்.

அத்தோடு சில ஐஎஸ்ஸின் சில தற்கொலைதாரிகள் வைத்தியசாலையில் நுழைந்துள்ளதாகவும் அவர்களுடன் தலிபான்கள் சண்டையிட்டு வருவதாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து இருந்து, விமான நிலையத்தில், மசூதியில் எனப் பல இடங்களில் தற்கொலைப் படை குண்டுத்தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஆப்கனின் இராணுவம் மற்றும் உளவுத் துறையின் முன்னாள் அதிகாரிகள் பலரும் ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன்  இணைந்துவிட்டதாகக் அந்நாட்டுச் செய்திகள் கூறிவருகிறான.

இதை தலிபான்கள் மறுத்து வருகிறனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Exit mobile version