பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதனால், அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் மத்திய நீர்பாசன திணைக்கள பொறியிலாளர் கு.இமாசலன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் நேற்று முன்தினம் (23) இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் 18 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளது. இதனால் நேற்று மாலை பாவற்குளத்தின் 2 வான் கதவுகள் ஒரு அடி அளவுக்கு திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாவற்குளத்தின் கீழ் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும் முன்னெச்சரிக்கையுடனும்,இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
அத்துடன் மத்திய நீர்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள முகத்தான்குளம் மற்றும் மருதமடுகுளம் ஆகியனவும் வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன. எனவே அதன் கீழ் உள்ள மக்களும் அவதானமாக இருக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews