கொழும்பு துறைமுகத்தில் சுமார் 900 த்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கியுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் டொலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களே இவ்வாறு தேங்கியுள்ளன.
இதேவேளை, குறித்த கொள்கலன்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews

