எல்லா குப்பைகளையும் நல்லாட்சி மீதே போட வேண்டாம். நல்லாட்சியில் நடந்த நல்ல விடயங்கள் பல உள்ளன. அவை தொடர்பில் கதைப்பதில்லை. கதைப்பதற்கு ஒரு நாளும் போதாது. எனவே, கருத்தரங்கை நடத்தி தெளிவுபடுத்த நான் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. உலகில் எந்த தலைவர், ஆட்சிக்கு வந்த பிறகு தனக்கான அதிகாரங்களைக் குறைத்துக்கொண்டார்? அந்த முன்மாதிரியை நான் வழங்கினேன். பல மாற்றங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே, குப்பைகளை மட்டும் நல்லாட்சிமீது திணிக்க வேண்டாம்.” – என்றார்.
#SriLankaNews