அறிகுறிகள் இருப்பின் பாடசாலைக்கு அனுப்பாதீர்கள்!- சுதர்ஷனி கோரிக்கை

97c27a134985ea9f28328ecf2542b5ea 1

கொரோனாத் தொற்றின் பின்னர் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்ப்ட்டிருப்பதால் சிறுவர்களின் உடல்நிலையில் பெற்றோர் அதிக கவனம் செலுத்துமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடும்போது, மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் உள்ள மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

சிறுவர்களுக்கு கொவிட் தொடர்பான அறிகுறிகள் காணப்படுமாயின்
அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துங்கள்.  .

காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்துக் கொள்ளுமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொடர்ந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றினாலேயே தொற்றில் இருந்து விடுபடமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version