சிரிக்கவோ, மது அருந்தவோ கூடாது: நினைவு தின கட்டுப்பாடுகள்!!

748020

வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜோங் இல்லின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.

வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜோங் இல்லின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனால், நாட்டு மக்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை வடகொரிய அரசு விதித்துள்ளது.

பத்து நாட்கள் வடகொரியாவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, வரும் பத்து நாட்களில் குடிமக்கள் மது அருந்தக் கூடாது, சிரிக்கக் கூடாது, மால்களுக்குச் செல்லக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை வடகொரிய அரசு விதித்துள்ளது” என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Exit mobile version