சர்வக்கட்சி மாநாடென்பது நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் ‘சூழ்ச்சி’ நடவடிக்கையாகும் – என்று கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் கூட்டணியான ‘தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம்’ குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார கூறியவை வருமாறு,
” சவரக்கத்தியில் சவரம் செய்யவும் முடியும், கழுத்தை அறுக்கவும் முடியும். அதுபோலவே இந்த சர்வக்கட்சி மாநாடும். பெயரளவில் சிறந்ததாக இருந்தாலும், அதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, பஸிலின் இந்த சூழ்ச்சிக்குள் அக்கப்பட்டுவிடவேண்டாம் என மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
பஸில் தனது சூழ்ச்சி நடவடிக்கையை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே, விமல், கம்மன்பில போன்றவர்களை வெளியேற்றியுள்ளார்.” – என்றார்.
#SriLankaNews