” விவசாயிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குகூட சட்டமூலங்களை மீள பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, எமது நாட்டிலும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். அதற்காக முடிவுகளை மீளப்பெறுவது தவறு கிடையாது.” – என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட்டால் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, விவசாயிகளையும், விவசாயத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். விவசாயிகளை , விவசாயத்திலிருந்து விரட்டியடிக்காத வகையிலேயே உரப்பிரச்சினை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். இது விடயத்தில் நாம் விட்ட தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக விவசாயிகளின் எதிர்ப்பினால் இந்திய பிரதமர் இரண்டு சட்டங்களை மீள பெற்றுக்கொண்டார். அது அவரின் நற்பெயருக்கு பாதிப்பாக அமையவில்லை. எனவே, இலங்கையிலும் வர்த்தக ரீதியான விவசாயத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் காரணிகளை உடன் நிவர்த்தி செய்ய வேண்டும்.
இழைக்கப்பட்ட தவறுகளை திருத்திக்கொள்ள வெட்கப்படக்கூடாது. பிழையான விடயத்தை சரியானது என தொடர்ந்தும் விளையாடிக் கொண்டிருப்பதே வெட்கப்பட வேண்டியதாகும். ” – என்றார் அமைச்சர் விமல்.
#SriLankaNews