சதொசவால் பொருள்கள் பகிர்ந்தளிப்பு – விசேட திட்டம்

WhatsApp Image 2021 09 02 at 06.41.15

சதொசவால் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை பகிர்ந்தளிக்கும் துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு முறைகளின் கீழ் உணவுப் பொருள்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என ‘சதொச’ நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து சதொச கிளைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. சதொச கிளைகளை திறந்து வைப்பதன் மூலம் கொரோனா கொத்தணியை ஏற்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டை மறுகின்றோம் என ‘சதொச’ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version