வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!

VideoCapture 20220305 143006

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் மக்களின் வாழ்வாதார தேவைக்குரிய காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும், இத்திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளினால் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் ஆராயும் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகிறது.

இக்கலந்துரையாடலில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், உரிய திணைக்களங்களின் உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version