இலங்கையின் உள்ளூர் சந்தைக்கான எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சரை் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
நாட்டின் பலபகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களை அடுத்தே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை லிட்ரோ நிறுவனமும் அமைச்சின் வேண்டுகோளிற்கிணங்க எரிவாயு விநியோகத்தை மறுஅறிவித்தல் வரை உடன் நிறுத்துவதற்கு அனைத்து எரிவாயு விநியோகஸ்தர்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் தமக்கு எதுவித அறிவித்தல்களும் கிடைக்கப்பெறவில்லை என்றும் தாம் தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளோம் என லாப்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews