அரச பங்காளிக்கட்சிகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
மேற்படி கூட்டத்துக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும், இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க , பிரமேநாத் தொலவத்த ஆகிய மொட்டு கட்சி எம்.பிக்கள் இக்கூட்டத்துக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையிலேயே அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
#SriLankaNews