சு.க வுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! – பெரமுன கோரிக்கை

Tissa Kuttiyarachchi

“அரசின் வேலைத்திட்டங்களை குழப்புவதற்கு முற்படும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எமது கட்சித் தலைமைகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி வலியுறுத்தினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” உரப்பிரச்சினையால் அரசு கவிழும் என எதிரணி நினைத்துக்கொண்டிருக்கின்றது. அதற்கு துணைபோகும் வகையிலேயே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயற்படுகின்றது.

குறிப்பாக அன்று இரசாயன உரத்துக்கு எதிராக நின்ற மைத்திரிபால சிறிசேன, இன்று மாறுபட்ட நிலைப்பாட்டில் உள்ளார். மாகாணசபைத் தேர்தல் நெருங்குவதால், மகனை முதலமைச்சர் ஆக்கும் நோக்கிலேயே அவர் விவசாயிகள் பற்றி கதைக்கின்றார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று கீழ்த்தரமான அரசியலை முன்னெடுக்கின்றது. அரசுக்குள் இருந்துகொண்டு சகலவிதமான வரப்பிரதாசங்களையும் அனுபவிக்கும் அக்கட்சி, அரசின் திட்டங்களையே குழப்பியடிக்க முற்படுகின்றது. இத்தகைய அட்சிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை அவசியம். அதனை எமது கட்சி தலைவர்கள் செய்யவேண்டும். ” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version