தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு டிஜிட்டல் அட்டை!!

8cebfadf keheliya rambukwella

கொரோனாத் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு தடுப்பூசி பெற்றமையை உறுதிப்படுத்தும் வகையில் இலத்திரனியல் அட்டை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்கப்படவுள்ளது என்று சுகாதார அமைச்சர் கெ​ஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

செப்ரெம்பர் மாதத்தின் முதல் வாரமளவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 75 வீதத்தை விட அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தியமைக்கான இலத்திரனியல் அட்டையை விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் சுகாதார அமைச்சர் கூறினார்.

Exit mobile version