நாட்டில் பரவலாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் மாட்டு வண்டியில் டீசல் வாங்க சென்ற சம்பவம் தற்சமயம் வைரலாகியுள்ளது.
தினந்தோறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக டீசல் பெற்றுக்கொள்வதற்காக வாகனங்கள் வரிசை கட்டியும், மக்கள் கான்களுடனும் வரிசைகட்டி நிற்பதை அவதானிக்க முடிகிறது.
இந்த நிலையில், டீசலைப் பெற்றுக்கொள்வதற்காக கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் மாட்டு வண்டியில் கான்களுடன் டீசல் வாங்க சென்றுள்ளார்.
அங்கு டீசல் கிடைக்காத நிலையில், அங்கிருந்து அவர் மாட்டு வண்டியிலேயே பிரதேச சபை கூட்டத்துக்கும் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் தெப்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment