ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் – அல்பேட்டன் பகுதியில் உள்ள பாடசாலையில் புலம்பெயர் இலங்கையர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியபோது, அவர் பயணித்த வாகனத்தை மறித்து புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
திருகோணமலையில் புதிய புத்தர் சிலை வைக்கும் விடயம் மற்றும் சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்துக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
எனினும், லண்டன் பொலிஸ் பிரிவினர் போராடடக்காரர்களைக் கட்டுப்படுத்தி, ரில்வின் சில்வாவின் வாகனம் செல்வதற்கு வழியேற்படுத்திக் கொடுத்ததாக லண்டன் ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.