களுபோவில வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் தீவிர சிகிச்சை பிரிவில்!!

WhatsApp Image 2021 09 08 at 11.15.55

கொழும்பு, களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

சிகிச்சைக்காக வைத்தியசாலையின் சாதாரண விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த அவர், இன்று காலை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியியாகியுள்ளன.

மருத்துவர் ருக்ஷான் பெல்லன, அரச மருத்துவ சம்மேளனத்தின் தலைவராகவும் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version